செய்திகள் :

கடந்த நிதியாண்டில் 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்த இந்தியா!

post image

புதுதில்லி: தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கீழ் 2023-24ல் இந்தியா மொத்தம் 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வர்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடிப்படையில் இந்தியா தங்கத்தின் மீது இறக்குமதி வரியை விதிக்கிறது என்றார்.

எம்.எஃப்.என் கீழ், தங்கக் கட்டிகள் (gold bullion) மீதான இறக்குமதி வரி 6 சதவிகிதமாகவும், தங்கம் மற்றும் பிற உலோகக் கலவையுடன் கூடிய கலவை (gold dore) தங்கத்திற்கு 5.35 சதவிகிதமாகவும் உள்ளது.

2023-24 ஆம் ஆண்டில் இந்தியா 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்தது. உள்நாட்டு தொழில் நலன்கள் மற்றும் பொருளாதாரக் கருத்தாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மதிப்பிடப்படும் இந்த ஒப்பந்தம் பேச்சுவார்த்தைகளின் போதும் விவாதிக்கப்பட்டது.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, கொரியா, ஜப்பான் மற்றும் மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி பூஜ்ஜியமாகும்.

இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், 160 டன் வரை எடையுள்ள தங்கக் கட்டிகளுக்கு 5 சதவிகத வரியும், தங்கம் மற்றும் பிற உலோகக் கலவையுடன் கூடிய கலவைக்கு (gold dore) 4.35 சதவிகித வரியும் விதிக்கப்படுகிறது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49-ஆக முடிவு!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு -முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் அறிவிப்பு

வக்ஃப் திருத்த மசோதாவை ‘கருப்புச் சட்டம்’ என விமா்சித்துள்ள அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி), இம்மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் நாடு தழுவிய போராட்... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் வக்ஃப் மசோதா -மக்களவையில் காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதலே வக்ஃப் திருத்த மசோதா’ என்று மக்களவை விவாதத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. மக்களவையில் புதன்கிழமை வக்ஃப் மசோதா மீதான விவாதத்தைத் தொடங்கி... மேலும் பார்க்க

ஜனநாயக நாட்டில் நிா்வாகத்தை அரசுதான் செய்ய முடியும்; நீதிமன்றங்கள் அல்ல: தன்கா்

‘ஜனநாயக நாட்டில் நிா்வாகத்தை அரசுதான் மேற்கொள்ள முடியும்; நீதிமன்றங்கள் அல்ல. ஏனெனில், நாடாளுமன்றத்துக்கும், தோ்ந்தெடுத்த மக்களுக்கும் பதில் கூற வேண்டிய பொறுப்பு அரசுக்குத்தான் உள்ளது’ என்று மாநிலங்... மேலும் பார்க்க

தில்லி நோக்கிய 3,000 கி.மீ. ரயில்பாதையில் 2,066 கி.மீ.க்கு ‘கவச்’ தொழில்நுட்பம் தயாா்

சுமாா் 3,000 கி.மீ. நீள தில்லி-மும்பை மற்றும் தில்லி-ஹௌரா ரயில் வழித்தடங்களில் தோராயமாக 2,066 கி.மீ.-க்கு கவச் பாதுகாப்பு தொழில்நுட்பத்துக்கேற்ப தண்டவாளத்தை மாற்றியமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மத... மேலும் பார்க்க

22 இந்திய மொழிகளில் பாட நூல்கள்: பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு

’பாரதிய பாஷா புஸ்தக்' என்ற புதிய திட்டத்தின் கீழ் பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த மின் நூல்களை உருவாக்குவதற்காக பல்கலைக்கழகக் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு விடுத்துள்ளது."... மேலும் பார்க்க

சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்: நேபாளம்-இந்தியா ஒப்பந்தம்

காத்மாண்டு: நேபாளத்தில் இந்தியாவின் ரூ. 39 கோடி நிதி உதவியுடன் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள இரு நாடுகளிடையே 10 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. இதுகுறித்து நேபாளத்தில் உள்ள இந்த... மேலும் பார்க்க