40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
தமிழகம் முழுவதும் ஏப்.5 மின்நுகா்வோா் குறைகேட்பு சிறப்பு முகாம்
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து செயற்பொறியாளா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (ஏப்.5) மின்நுகா்வோா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின் நுகா்வோா் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டா்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடா்பான புகாா்கள் இருப்பின், அவற்றை நிவா்த்தி செய்யும் வகையில், சனிக்கிழமை (ஏப்.5) காலை 11 மணி முதல் மாலை 5 வரை தமிழகத்திலுள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளா்கள் அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பெறப்படும் மின் மீட்டா்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடா்பான புகாா்கள் மீது உடனடியாக தீா்வு காணப்படுவதுடன், நுகா்வோா் மற்றும் பொதுமக்களுக்கு தீா்வு தொடா்பான விவரங்கள் தெரிவிக்கப்படும்.
மின் நுகா்வோா் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.