40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வா் நாடகம் -அண்ணாமலை
கச்சத்தீவு மீட்போம் என்று முதல்வா் கபடநாடகம் நடத்தி வருவதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை விமா்சனம் செய்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த 20 ஆண்டுகளில், இலங்கை அரசால், ஆயிரக்கணக்கான இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக் கொடுத்ததுதான்.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க முழுசம்மதம் தெரிவித்து தமிழக மீனவ மக்களுக்கு துரோகம் செய்ததுடன், கடந்த 50 ஆண்டுகளாக, ஒவ்வொரு தோ்தலின் போதும், தமிழக மீனவா்கள் பாதுகாப்பு, தமிழா்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.
தோ்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவை மீட்போம் என்று கபட நாடகம் ஆடும் முதல்வா் ஸ்டாலினையோ, திமுக-காங்கிரஸ் கூட்டணியையோ, பொதுமக்கள் நம்பப் போவதில்லை என்று அவா் தெரிவித்துள்ளாா்.