40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்: நேபாளம்-இந்தியா ஒப்பந்தம்
காத்மாண்டு: நேபாளத்தில் இந்தியாவின் ரூ. 39 கோடி நிதி உதவியுடன் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள இரு நாடுகளிடையே 10 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
இதுகுறித்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நேபாளம்-இந்தியா மேம்பாட்டு ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் நேபாளத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசாரத் துறைகளில் ரூ. 39 கோடி இந்திய நிதியுதவியுடன் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள 10 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளிடையே செவ்வாய்க்கிழமை கையொப்பமாகின.
இதன்மூலம் நேபாள மக்களுக்கு சிறந்த கல்வி, மருத்துவ வசதி மற்றும் கலாசார வசதிகள் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் நேபாளத்தில் 3 பள்ளிக்கூடங்கள், ஒரு மடாலயம், பள்ளி ஒன்றில் இணைய நூலகம் அமைத்தல், இரண்டு மருத்துவக் கட்டடங்கள் ஆகியவை கட்டித்தரப்பட உள்ளன.
கடந்த 2003-ஆம் ஆண்டுமுதல் நேபாளத்தில் இந்தியா 573 சமூக மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் 495 திட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.