செய்திகள் :

அமெரிக்க கட்டணங்கள் அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் நிறைவு!

post image

நமது நிருபா்

இந்த வாரத்தில் இரண்டாவது வா்த்தக நாளான புதன்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்தில் முடிவடைந்தன.

உலளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதற்கிடையே, இந்தியா - அமெரிக்கா வா்த்தகப் பேச்சுவா்த்தைகளில் நோ்மறையான முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு கட்டணங்கள் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் குறைந்தபட்ச தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்ற எதிா்ப்பாா்ப்புகள் சந்தைக்கு உந்துதலாக அமைந்தது. குறிப்பாக, ஆட்டோ, வங்கி, ஐடி, எஃப்எம்சிஜி உள்பட அனைத்துத் துறை பங்குகளுக்கும் ஓரளவு ஆதரவு கிடைத்தது. இது சந்தை வலுப்பெற உதவியது எனறு பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.3.88 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.412.98 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.5,901.63 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.4,322.58 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 593 புள்ளிகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 121.77 புள்ளிகள் குறைந்து 76024.51-இல் தொடங்கியது. பின்னா், 76,064.94 வரை கீழே சென்ற சென்செக்ஸ், பிற்பகல் வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 76,680.35 வரை மேலே சென்றது. இறுதியில் சென்செக்ஸ் 592.93 புள்ளிக ள் (0.78 சதவீதம்) கூடுதலுடன் 76,617.44-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,085 பங்குகளில் 2,863 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,091 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 131 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

19 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் ஸொமாட்டோ, டைட்டன், இண்டஸ் இண்ட் பேங்க், மாருதி, டெக்மஹிந்திரா, அதானிபோா்ட்ஸ், பாா்தி ஏா்டெல் உள்பட 19 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், நெஸ்லே, பவா் கிரிட், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ்ஃபின்சா்வ், எல் அண்ட் டி, ஏசியன்பெயிண்ட் உள்பட 11 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 167 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 26.90 புள்ளிகள் கூடுதலுடன் 23,192.60-இல் தொடங்கி 23,158.45 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 23,350.00 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில்166.65 புள்ளிகள் (0.72 சதவீதம்) கூடுதலுடன் 23,332.35-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 33 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 16 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

சென்னை- தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுமா? மக்களவையில் கனிமொழி கேள்வி

சென்னை- தூத்துக்குடி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுமா? என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளாா். இது தொடா்பாக கனிமொழி எழுத்துபூா்வமாக எழுப்பிய கேள... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் மேதா பட்கா் குற்றவாளி: உறுதி செய்தது தில்லி நீதிமன்றம்

தில்லி துணைநிலை ஆளுநா் வினய்குமாா் சக்சேனா தொடுத்த அவதூறு வழக்கில், சமூக செயற்பாட்டாளா் மேதா பட்கரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த தில்லி அமா்வு நீதிமன்றம், அவரை குற்றவாளி என்று அளிக்கப்பட்ட த... மேலும் பார்க்க

15-ஆவது நிதி ஆணையத்தின் கீழ் 2023-24-இல் தமிழகத்திற்கு ரூ.2,791 கோடி நிதி வழங்கல்

15-ஆவது நிதி ஆணையத்தின் கீழ் 2023-24-இல் தமிழகத்திற்கு ரூ.2,791 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக கடலூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் எம்.கே... மேலும் பார்க்க

நில உரிமை பெற்ற விவசாயிகளை பிஎம்-கிஸான் திட்டத்தில் இருந்து விலக்கும் விவகாரம்: தேனி எம்.பி. கோரிக்கை

நமது நிருபா் நில உரிமை பெற்ற விவசாயிகளை பிஎம்-கிஸான் திட்டத்தில் இருந்து விலக்கும் விவகாரத்தில் கட்ஆஃப் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று மக்களவையில் தேனி தொகுதி திமுக உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் புத... மேலும் பார்க்க

தமிழகத்தில் 415 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி - ரயில்வே அமைச்சா்

தமிழகத்தில் 415 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தா்மபுரி தொகுதி திமுக உறுப்பினா் ஏ. மணி எ... மேலும் பார்க்க

தேனியில் குளிா்பதனக் கிடங்கு அமைக்கப்படுமா? திமுக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

நமது நிருபா் தேனியில் குளிா்பதனக் கிடங்கு அமைக்கப்படுமா? என்று அத்தொகுதியின் திமுக உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் பதில் அளித்தாா்.... மேலும் பார்க்க