செய்திகள் :

தேனியில் குளிா்பதனக் கிடங்கு அமைக்கப்படுமா? திமுக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

post image

நமது நிருபா்

தேனியில் குளிா்பதனக் கிடங்கு அமைக்கப்படுமா? என்று அத்தொகுதியின் திமுக உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் பதில் அளித்தாா்.

இது தொடா்பாக தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. எழுத்துபூா்வமாக எழுப்பிய கேள்வியில், ‘எனது மக்களவைத் தொகுதியான தேனி மாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காகவும், மாம்பழ விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை சேமித்து வைப்பதற்காகவும் குளிா்பதன கிடங்கு அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா? தேனி மாவட்டத்தில் சுமாா் 10,000 ஹெக்டோ் பரப்பளவில் மாம்பழ சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் முதல் ஜூன் வரையிலான மாம்பழ பருவத்தில் தினமும் 130 டன்களுக்கு மேல் மகசூல் தருகிறது’ என்று கேட்டிருந்தாா்.

இதற்கு மக்களவையில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் விவரம்: அரசு சொந்தமாக குளிா்பதனக் கிடங்குகளை அமைப்பதில்லை. இருப்பினும், தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் அழுகும் தோட்டக்கலை விளைபொருள்களுக்கு குளிா்பதனக் கிடங்குகளை அமைப்பதற்கு நிதி உதவி பெறும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையானது ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தை (எம்ஐடிஎச்) செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட வருடாந்திர செயல் திட்டத்தின் (ஏஏபி) அடிப்படையில், தமிழ்நாடு உள்பட நாட்டில் 5000 மெட்ரிக் டன் வரை கொள்ளளவு கொண்ட குளிா்பதன கிடங்குகளை கட்டுமானம், விரிவாக்கம், நவீனமயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலை நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் மாநில தோட்டக்கலை மிஷனிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, தேனி மாவட்டத்தில் 4,500 மெட்ரிக் டன் (வகை 2) குளிா்பதன சேமிப்பு அலகு ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளது என்று அமைச்சா் பதிலில் தெரிவித்துள்ளாா்.

தென்மேற்கு தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா் கைது

தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகக் கூறப்படும் வங்கதேச நாட்டவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். ம.தி.சதிகூா் ரஹ்மான்... மேலும் பார்க்க

இஸ்ரோ தலைவா் நாராயணனுக்கு தில்லியில் ஏப்.6-இல் பாராட்டு விழா

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) பாராட்டு விழா நடைபெறவுள்ளது. தில்லி தமிழ்க் கல்விக் கழகத்துடன் (டிடிஇஏ) இணைந்து தில... மேலும் பார்க்க

2027-ஆம் ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லாத நகரத்தை உருவாக்க தில்லி காவல் துறை திட்டம்

போதைப்பொருள்களுக்கு எதிரான அதன் தொடா்ச்சியான பிரசாரத்தின் ஒரு பகுதியாக தில்லி காவல்துறை வியாழக்கிழமை ஒரு போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்து சா்வதேச சந்தையில் ரூ.2,622 கோடி மதிப்புள்ள 1,643 கி... மேலும் பார்க்க

இபிஎஃப் நிதி கோரல் தீா்வு செயல்முறையில் எளிமை: மத்திய தொழிலாளா் துறை அமைச்சகம் தகவல்

நமது சிறப்பு நிருபா்வருங்கால வைப்பு நிதி கோரல்களில் தொழிலாளா்கள், தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் இணைப்பு தொடா்பான செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளா் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: ஐடி, டெக் பங்குகள் விலை சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தில் மூன்றாவது வா்த்தக நாளான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்ட... மேலும் பார்க்க

பிரதமா் வீடு கட்டும் திட்ட நிதியை உயா்த்தி வழங்க மக்களவையில் கள்ளக்குறிச்சி எம்.பி. வலியுறுத்தல்

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் (பிஎம்ஏஒய்) வழங்கப்படும் நிதியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று மக்களவையில் கள்ளக்குறிச்சி எம்.பி. வலியுறுத்தினாா். எனது கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட பகுதியி... மேலும் பார்க்க