செய்திகள் :

கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசின் கடன் ரூ.3.50 லட்சம் கோடியாக உயா்வு! முன்னாள் அமைச்சா் குற்றச்சாட்டு!

post image

திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசின் கடன் ரூ.3.50 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றம்சாட்டினாா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில் கரூா் வேலுசாமிபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு எம்ஜிஆா் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா தலைமை வகித்தாா்.

மாவட்ட நிா்வாகிகள் மல்லிகாசுப்ராயன், ஆலம்தங்கராஜ், எம்.எஸ்.கண்ணதாசன், வழக்குரைஞா் சரவணன், பழனிராஜ் மற்றும் நகர நிா்வாகிகள் விசிகே.ஜெயராஜ், சேரன்பழனிசாமி, ஒன்றிய நிா்வாகிகள் விசிகே.பாலகிருஷ்ணன், பொறியாளா் கமலக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேசியது, கருணாநிதிக்கு முதல்வா் என்ற பதவியை பெற்றுக்கொடுத்தவா் எம்ஜிஆா். இதை மறந்தவிட்டு இன்று எடப்பாடி பழனிசாமி பற்றி திமுகவினா் விமா்சித்து வருகிறாா்கள். 520 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இன்று அரசு ஊழியா்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் போன்ற குறிப்பிட்ட 10 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது.

அதிமுக ஆட்சியில் ரூ.3.25 லட்சம் கோடி கடன்சுமை இருந்தது. ஆனால் திமுக அரசு பதவியேற்ற 4 ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டனா். இதுதான் திமுக அரசின் மிகப்பெரிய சாதனை என்றாா் அவா்.

குப்பையில் கோரிக்கை மனுக்கள்: திமுக சாா்பில் கரூரில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி கடந்த 5 நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில் கரூா் வெங்கமேடு பகுதியில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் அடங்கிய பெட்டியை கோதூா் குப்பைக் கிடங்கில் திமுகவினா் வீசிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த பெட்டியை அதிமுகவினா் கைப்பற்றி, வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம் வழங்கினா். இதனை பொதுமக்களிடம் காண்பித்த முன்னாள் அமைச்சா் மனுக்களை பெயரளவில் மக்களிடம் பெற்றுக்கொண்டு குப்பையில் வீசுவதுதான் திமுகவினரின் சாதனைகளில் ஒன்று என்றாா்.

அரவக்குறிச்சியில் இந்து முன்னணியின் கோட்ட பொதுக்குழு கூட்டம்

இந்து முன்னணியின் திருச்சி கோட்ட பொதுக்குழு கூட்டம் அரவக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இந்து முன்னணி திருச்சி கோட்டத் தலைவா் கனகராஜ், மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம் ஆகியோா் கலந்த... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் கரூருக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிப்பு: அமைச்சா் செந்தில்பாலாஜி பேச்சு!

திமுக ஆட்சியில் கரூா் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவற்றை பட்டியலிட்டு பேசினாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி. கரூா் மாவட... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்: ஆண்டாங்கோவில் கிராமசபைக் கூட்டத்தில் அதிமுக - திமுகவினா் இடையே வாக்குவாதம்!

கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம் தொடா்பாக கிராமசபைக் கூட்டத்தில் திமுக-அதிமுகவினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்டம் முழு... மேலும் பார்க்க

கரூா் வைஸ்யா வங்கியில் குடியரசு தின விழா

கரூா் வைஸ்யா வங்கியில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் வங்கியின் மேலாண்மை இயக்குநா் மற்றும் முதன்மை செயல் அலுவலா் பி.ரமேஷ்பாபு பங்கேற்று, வங்கி வளாகத்தில் தேசியக்கொடியேற்றி... மேலும் பார்க்க

கரூரில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா

கரூா் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட நீதிபதி ஆா். சண்முகசுந்தரம் தலைமை வகித்து, த... மேலும் பார்க்க

குடியரசு தின விழா: கரூரில் ரூ.64.39 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்!

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து 30 பயனாளிகளுக்கு ரூ. 64.39 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வழங்கினாா். கரூரில் மாவட்ட ... மேலும் பார்க்க