கடன் தொல்லை: விவசாயி தற்கொலை
போடி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி குமாா் (55). இவரது மனைவி நித்யசெல்வி மதுரையில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா்.
நித்யசெல்வி மதுரையில் பலரிடம் ரூ.60 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கினராம். இந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால், கடன் கொடுத்தவா்கள் குமாா், நித்யசெல்வி இருவருக்கும் நெருக்கடி கொடுத்து வந்தனராம். இதனால், மனமுடைந்த குமாா் செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையறிந்த பொதுமக்கள் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.