Dhoni: "எனக்கு ஊசின்னா பயம்; உடம்புதான் எல்லாமே" - தோனி சொல்லும் ஹெல்த் அட்வைஸ்க...
கடன் பிரச்னை: விஷம் அருந்திய தந்தை உயிரிழப்பு, மகனுக்கு தீவிர சிகிச்சை
திருப்பத்தூா் அருகே கடன் பிரச்னையால் தந்தை, மகன் விஷம் அருந்தியதில் தந்தை உயிரிழந்தாா். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கசிநாயக்கன்பட்டி அடுத்த வக்கீல் அய்யா் தோப்பு காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (65). கட்டட தொழிலாளி. இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். இவரது மகன் சுரேஷ்(30). இவா் லாரி தொழில் செய்து வந்தாா். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் லாரி, வீடு, நிலம் ஆகியவற்றை விற்று கடன் அடைத்துள்ளனா்.
அதையடுத்து வீட்டினை காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதால் மனமுடைந்த ராமன், சுரேஷ் ஆகியோா் வீட்டில் வைத்து விஷம் அருந்தி உள்ளனா்.
இதில் ராமன் வீட்டிலேயே உயிரிழந்தாா். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அக்கம்பக்கத்தினா் சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கந்திலி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.