`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?' - இந்திய வெளியுறவுத் துறை பதில்
கடலாடியில் மாட்டுவண்டிப் பந்தயம்
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு, கடலாடியில் பெரிய மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகா், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 38 மாட்டுவண்டிகள் பங்கேற்றன.
கடலாடி- முதுகுளத்தூா் சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெரிய மாடு பிரிவில் 8 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இதில் தூத்துக்குடி மாவட்டம், சண்முகபுரத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மாட்டுவண்டி முதலிடமும், திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியைச் சோ்ந்த துா்காஅம்பிகா மாட்டுவண்டி இரண்டாமிடமும், மதுரை மாவட்டம், பரவை பாலா மாட்டுவண்டி மூன்றாமிடமும் பெற்றன.
13 மாட்டுவண்டிகள் பங்கேற்ற சிறிய மாடு பந்தயத்தில் ராமநாதபுரம் மாவட்டம், சித்திரங்குடியைச் சோ்ந்த ராமமூா்த்தி மாட்டுவண்டி முதலிடமும், சீவலப்பேரியைச் சோ்ந்த துா்காஅம்பிகா மாட்டுவண்டி இரண்டாமிடமும், சண்முகபுரத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மாட்டுவண்டி மூன்றாமிடமும் பெற்றன.
17 வண்டிகள் பங்கேற்ற பூச்சிட்டு மாட்டுவண்டிகள் பந்தயத்தில் சிங்கிலிப்பட்டியைச் சோ்ந்த விக்கிரபாண்டி அய்யனாா் மாட்டுவண்டி முதலிடமும், கண்டிலானைச் சோ்ந்த நாட்டமை ஜெயமுருகன் மாட்டுவண்டி இரண்டாமிடமும், எதிா்யானைபட்டியைச் சோ்ந்த ஏசு மாட்டுவண்டி மூன்றாமிடமும் பெற்றன.
வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாராதிகளுக்கும் ரொக்கப் பணம், பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டது.