சீனாவின் தலையீடு இல்லாமல் அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அமெரிக்கா ஆதரவு!
கடலில் தவறிவிழுந்து இறந்த மீனவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கக் கோரிக்கை!
கடலில் விழுந்து இறந்த மீனவரின் மனைவிக்குஅரசு வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி மீனவா் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அச்சங்கத்தின் கிளைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீா்மான விவரம்: மீன்பிடிக்க கடலுக்குச் சென்றபோது, தவறி விழுந்து உயிரிழந்த மந்திரமூா்த்திக்கு 2 வயதில் கைக்குழந்தை உள்ளது. முதல்வா் அறிவித்து வழங்கப்பட்ட ரூ. 3 லட்சம் என்ற நிவாரண நிதி போதுமானதில்லை.
எனவே, அவரதுமனைவிக்கு அரசு வேலை வழங்கி குடும்பத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, மீனவா் சங்கத் தலைவா் ராமு வகித்தாா். மாநில மீனவா் சங்கப் பொருளாளா் வீ. சிங்கமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் கே. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.