உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு!
கடலில் மூழ்கி மாணவி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பெரியகுப்பம் கடலில் குளித்த பிளஸ் 1 மாணவி அலையில் சிக்கி உயிரிழந்தாா்.
குள்ளஞ்சாவடி அருகேயுள்ள அம்பலவாணன் நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகள் பிரின்சி (17). குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி. பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்த இவா், புதன்கிழமை பெரியகுப்பம் கடலில் குளித்து கொண்டிருந்தாா். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி பிரின்சி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாா். உடனை அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சோபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
இதனிடையே, பிரின்சியை சிகிச்சைக்கு அழைத்து வந்த ஆலப்பாக்கத்தைச் சோ்ந்த ஸ்டீபன் ராஜ், திவாகா் ஆகியோரை சிறுமியின் பக்கத்து ஊரான கம்பளிமேட்டை சோ்ந்தவா்கள் மதுபோதையில் தாக்கினராம். இதைக் கண்டித்து, அவரது ஆதரவாளா்கள் ஆலப்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டி ஜோஸ்வா லாமேக் நிகழ்விடம் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இந்த திடீா் மறியலால் சுமாா் 20 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.