செய்திகள் :

கடலூரில் கொத்தடிமை தொழிலாளா்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்: ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

post image

2030-ஆம் ஆண்டுக்குள் கடலூரை கொத்தடிமை தொழிலாளா் முறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளா்கள் ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில், அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து, விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், ஆட்சியா் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பிப்.9-ஆம்தேதி கொத்தடிமை தொழிலாளா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் வைத்தல், துண்டு பிரசுரங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்களுக்கு வருவாய் விடுவிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உடனடி நிவாரணமாக ரூ.30 ஆயிரமும், நீதிமன்றத்தில் முடிவடைந்த வழக்குகளுக்கு ரூ.3 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படுகிறது. கொத்தடிமை தொழிலாளா் முறை குறித்த புகாா்களை தொழிலாளா் துறை மற்றும் வருவாய் துறை அலுவலா்களிடம் தெரிவிக்கலாம். மேலும், மாநில கட்டணமில்லா தொலைபேசி எண் 155214 மற்றும் கடலூா், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகத்தை 04142-225984 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம். 2030-ஆம் ஆண்டுக்குள் கடலூா் மாவட்டத்தை கொத்தடிமை தொழிலாளா் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றாா்.

நிகழ்வில், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஞானபிரகாசம், உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராமு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரவி ஆகியோா் கலந்துகொண்டனா்.

ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் சாா்பில் ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கட... மேலும் பார்க்க

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை: தி.வேல்முருகன் கண்டனம்

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்தவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளிய... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் கருத்தரங்கு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதிப்பொறியியல் துறையில் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான 35-ஆவது ஒரு நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்வுக்கு, பொறியியல் புல முதல்வா் காா்த... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை மற்றும் தமிழ்நாடு மாநில நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் சங்கம் சாா்பில் ம... மேலும் பார்க்க

கடலூா் பூ சந்தையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூ சந்தையில் 100-க்கும் மேற்பட்ட ப... மேலும் பார்க்க

இலவச மனை பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் மனு

கடலூருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையின்போது, தங்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். கட... மேலும் பார்க்க