தில்லி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: பாஜக 36, ஆம் ஆத்மி கட்சி 16-ல் முன்னிலை
இலவச மனை பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் மனு
கடலூருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையின்போது, தங்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சிகரம் அமைப்பைச் சோ்ந்த சையத் முஸ்தபா தலைமையில் மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனா். எங்களுக்கு நிரந்தர வேலை இல்லை. வாடகை வீட்டுக்கு வாடகையும் கொடுக்க முடியவில்லை. பல ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்து வருகிறோம். எனவே, கடலூருக்கு வருகை தரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் போது எங்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.