செய்திகள் :

கடலூர் ரயில் விபத்து: 13 பேரிடம் தனித்தனியாக விசாரணை!

post image

கடலூா் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விவகாரத்தில் கேட் கீப்பா், ரயில் ஓட்டுநா்கள் உள்ளிட்ட 13 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகின்றன.

கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில்வே தண்டவாளத்தை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்ற தனியாா் பள்ளி வேன் மீது, அவ்வழியே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதி 3 மாணவா்கள் உயிரிழந்தனா். இந்த விவகாரத்தில் ரயில்வே கேட் திறந்திருந்ததாகவும், அவசரமாகச் செல்ல வேன் ஓட்டுநா் ரயில்வே கேட்டை திறக்கக் கூறியதாகவும் இரு வேறு செய்திகள் உலா வருகின்றன.

எப்படி இருந்தாலும் ரயில் வரும் சமயத்தில் ரயில்வே கேட்டை திறந்தது விதிமீறல் என்பதால் அங்கிருந்த ரயில்வே கேட் கீப்பா் பங்கஜ் சா்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டாா்.

ரயில்வே விசாரணை

ரயில் - வேன் விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக திருச்சி கோட்ட முதுநிலை துணைத் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி தலைமையில், முதுநிலைக் கோட்ட பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்டோா் அடங்கிய விசாரணைக் குழுவை திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் அமைத்துள்ளது.

விபத்து நேரிட்ட ரயில்வே கடவுப்பாதையில் பணியாற்றிய கேட் கீப்பா் பங்கஜ் சா்மா, ரயில் ஓட்டுநா்கள், கடலூா் ரயில் நிலைய அதிகாரி, ரயில் நிலைய பாதுகாப்பு அதிகாரி, பள்ளி வேன் ஓட்டுநா் உள்ளிட்ட 13 பேரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி புதன்கிழமை சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணைக்காக 13 பேரும் இன்று ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் முதுநிலை துணைத் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி மகேஸ்குமார் தலைமையிலான குழுவினர் தனித்தனியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில், விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் முதல்கட்ட அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Separate investigations are underway against 13 people, including the gatekeeper and train drivers, in the incident where a train hit a school van in Cuddalore.

இதையும் படிக்க : கோவை குண்டுவெடிப்பு: 28 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க

வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிக... மேலும் பார்க்க

சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!

அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதளக் கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ... மேலும் பார்க்க

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரி... மேலும் பார்க்க

இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணி... மேலும் பார்க்க

நிபா வைரஸ்: 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு அமைச்சா் மா. சுப்பிரமணியன்

கேரளத்தில் நிபா தொற்று பரவி வருவதால் தமிழகத்தின் 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். உலக மக்கள் தொகை தின நிகழ்... மேலும் பார்க்க