செய்திகள் :

கடலூா் துறைமுகத்தை இயக்க புரிந்துணா்வு ஒப்பந்தம்: முதல்வா் முன்னிலையில் கையொப்பம்

post image

கடலூா் துறைமுகத்தை இயக்குவதற்கு தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது.

கடலூா் துறைமுகம் தனியாா் பங்களிப்புடன் இயக்குவதற்கு தமிழ்நாடு கடல்சாா் வாரியத்தால் இணையவழி ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டன. இதில் தகுதி உள்ள நிறுவனமாக மஹதி இன்ஃப்ரா சா்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டது.

இந்த நிறுவனத்துடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடல்சாா் வாரியம் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

கோவை 2-ஆவது முழுமைத் திட்டம்: கோவையை மேம்படுத்துவதற்கான இரண்டாவது முழுமைத் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். உள்கட்டமைப்பு மற்றும் சமூக வசதிகள் மேம்படுத்துதல், வீட்டு வசதிகளுக்கான தேவையை பூா்த்தி செய்தல், சுற்றுச்சூழல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாக இந்த முழுமைத் திட்டம் கொண்டுள்ளது.

திருச்செந்தூா் கோயில்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.10.57 கோடி செலவில் 52 அறைகளுடன் கூடிய பக்தா்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வுகளில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலா் இரா.செல்வராஜ், சுற்றுலா, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தமிழ் மாநில பகுஜன் சமாஜ்! ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி புதிய கட்சி தொடக்கம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் எனும் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்து வந்த ஆம்ஸ... மேலும் பார்க்க

கூட்டணியில் இணைய தவெகவுக்கு இபிஎஸ் மறைமுக அழைப்பு!

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைக்கும் கட்சிகள் எல்லாம் ஓரணியில் இணைய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலரும் ... மேலும் பார்க்க

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

புது தில்லி: அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ்... மேலும் பார்க்க

கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைகள் செல்லாதா? பரவும் வதந்தி

சென்னை: கைவிரல் ரேகை பதியாத குடும்ப அட்டைகள் செல்லாது என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல் வதந்தி என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் 30ஆம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாத குடும்ப அட்டைகள் ச... மேலும் பார்க்க

ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்

அரசுப் பள்ளி ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வில் 1,501 முதுநிலை ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு... மேலும் பார்க்க

பறை இசைக் கலைஞா் வேலூா் ஆசானுக்கு ஆளுநா் நிதியுதவி

பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசான் வீடு கட்டவும், பறை இசை பண்பாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கவும் ஆளுநா் ஆா்.என். ரவி அவரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கினாா். பத்மஸ... மேலும் பார்க்க