செய்திகள் :

கூட்டணியில் இணைய தவெகவுக்கு இபிஎஸ் மறைமுக அழைப்பு!

post image

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைக்கும் கட்சிகள் எல்லாம் ஓரணியில் இணைய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஜூலை 7 ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணத்தைத் தொடங்குகிறார். இந்த சுற்றுப்பயணத்திற்கான லோகோ மற்றும் பாடலை இன்று வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், "அதிமுக - பாஜக கூட்டணி குறித்து விஜய் விமர்சனம் செய்திருக்கிறார். அனைத்து கட்சிகளுமே தாங்கள் வளர வேண்டும் என விமர்சனம் செய்வது இயல்பு" என்றார்.

'திமுக - பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறியிருக்கிறார், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று அவர் நேரடியாகச் சொல்லவில்லை' என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த இபிஎஸ்,

"இந்த கேள்வியை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அதில் ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் இணைந்து தேர்தலிலே கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.

திமுக அகற்றப்பட வேண்டும் என்று யார் யாரெல்லாம் நினைக்கிறார்களோ அவர்களோடு கூட்டணி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எங்களது கருத்து" என்று கூறினார்.

நேற்றைய கூட்டத்தில் திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறினாலும் அதிமுகவை நேரடியாகச் சொல்லவில்லை என்ற கருத்து பேசப்படுகிறது. தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் அதிமுக, பாஜக ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டி வருகிறது.

ஆனால் நவம்பருக்குப் பிறகே கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தவெக தரப்பு கூறியிருக்கிறது. ஜனவரியில்தான் கூட்டணி அறிவிப்பு என தேமுதிகவும் கூறியிருக்கிறது.

அதனால் தமிழ்நாட்டில் நவம்பருக்குப் பிறகே கூட்டணி குறித்த இறுதி முடிவுகள் தெரிய வரும்.

AIADMK General Secretary Edappadi Palaniswami has said that all parties that want to overthrow the DMK government should unite.

அதிமுக தலைமையில்தான் கூட்டணி; நானே முதல்வர் வேட்பாளர்! - இபிஎஸ்

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று(ஜூலை 5) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுத... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஓபிஎஸ் நேரில் ஆறுதல்!

மடப்புரத்தில் காவல்துறை விசாரணையில் மரணமடைந்த அஜித்குமார் வீட்டிற்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலில் நகை காணாமல... மேலும் பார்க்க

கன்னட மொழி குறித்த கருத்துகளை வெளியிட கமல்ஹாசனுக்கு இடைக்காலத் தடை!

கன்னட மொழி குறித்த அறிக்கைகளை வெளியிட கமலஹாசனுக்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.கன்னட மொழி தொடர்பான விவகாரத்தில், நடிகர் கமல்ஹாசன் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டத... மேலும் பார்க்க

அமித் ஷாவின் தமிழக பயணம் ரத்து?

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகள், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட... மேலும் பார்க்க

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டத்தை சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் இந்த ஆண்டு சட்டப்பேர... மேலும் பார்க்க

2 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 5ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா... மேலும் பார்க்க