2023-24-இல் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை: ஏடிஆா் அறிக்கை தகவல்
கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 3,900 புள்ளிகள் சரிவு!
வாரத்தின் முதல்நாளான இன்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்பட 60 நாடுகள் மீது வரி விதிப்பை அதிகரிப்பதை அறிவித்த நிலையில் அவை செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
இதனால், வா்த்தகப் போர் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் உலகளவில் பங்குச்சந்தைகளில் இதன் தாக்கம் எதிரொலித்து வருகின்றது.
இதனால், இந்திய பங்குச்சந்தையும் கடுமையான பாதிப்பைச் எதிர்கொண்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த வார முடிவில் 75,364.69 புள்ளிகளில் இருந்த நிலையில் இன்று கிட்டத்தட்ட 4,000 புள்ளிகள் சரிந்து 71,449.94 புள்ளிகளில் தொடங்கியது.
இன்று காலை 9.40 மணியளவில் 72648.17 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.