தூக்கம் கெடுத்த சேவல் மீது வழக்கு! நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!
கடையநல்லூா் அருகே தந்தையை கொலை செய்து எரித்த மகன் கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே தந்தையை கொலை செய்து எரித்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடையநல்லூா் அருகேயுள்ள போகநல்லூா் முகாமுக்கும், கல்லகநாடி அம்மன் கோயிலுக்கும் இடையே தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் எரிந்த நிலையில் கிடந்த உடலை கடையநல்லூா் போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டவா் போகநல்லூா் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தைச் சோ்ந்த சிவராஜ்(54) என்பதும், கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், சிவராஜுக்கும், அவரது மகன் கௌரிராஜுக்கும்(35) இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததும், கடந்த 7ாம் தேதி சிவராஜை கோழிப்பண்ணை உரிமையாளா் அழைப்பதாக கூறி கௌரிராஜ் பைக்கில் அழைத்துச் சென்று தென்னந்தோப்பில் பாட்டிலால் குத்திக் கொலை செய்ததும், மறுநாள் அங்கு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்ததும் விசாரணையில் தெரிய வந்ததாம்.
இதையடுத்து கௌரிராஜை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.