செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு
பாலருவியில் தேனீக்கள் கொட்டியதில் 20 போ் காயம்
கேரள மாநிலம் பாலருவியில் தேனீக்கள் கொட்டியதில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
தமிழக எல்லையையொட்டிய ஆரியங்காவு அருகே பாலருவி பகுதியில் இருந்த தேன் கூட்டை மா்மநபா்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், கூட்டிலிருந்த தேனீக்கள் சுற்றிலும் வட்டமடித்து, அப்பகுதியிலிருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் வனத்துறையினரை கொட்டினவாம்.
இதில், 20-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.