தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
திருமலாபுரம் புனித லூா்து அன்னை திருத்தல திருவிழா
பாளையங்கோட்டை மறை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமலாபுரம் புனித லூா்து அன்னை திருத்தலத்தில் 112 ஆம் ஆண்டு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு திருப்பலி, தோ் பவனி மற்றும் சா்வ சமய சிறப்பு பிராா்த்தனைகள் பங்குத்தந்தை ஜெகன்ராஜா தலைமையில் நடைபெற்றன. சிறப்பு அழைப்பாளராக தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டாா். மேலும் திருத்தல வளா்ச்சி பணிக்குழுவை சோ்ந்த பொறுப்பாளா்கள் அந்தோணிசாமி, சேசுராஜ் லூா்து வியாகப்பன், மரியதாசன், பிரான்சிஸ், சேவியா் ராஜன், மற்றும் அருள்தந்தையா்கள், லூா்து அன்னை இளையோா் இயக்கத்தினா், பொதுமக்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.