செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு
பெண் எரித்து கொலை: இலத்தூரில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் விசாரணை
தென்காசி மாவட்டம், இலத்தூா் பகுதியில் பெண் எரித்துக்கொல்லப்பட்டது தொடா்பாக தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவி வா்மன் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி ஆலங்குளம் லெட்சுமிபுரம் வடக்குதெருவை சோ்ந்தவா் ஜெ.ஜான்கில்பா்ட் பிரேம்ராஜ்(30) என்பவா், குடும்பத்தகராறில் தனது மனைவி கமலியை (23) அடித்துக் கொன்று சடலத்தை தனது உறவினா் சிவகாசி காமராஜா் நகா் காலனியைச் சோ்ந்த தங்க திருப்பதி (22) உதவியுடன் இலத்தூா் அருகேயுள்ள மதுநாதப்பேரி குளம் பகுதியில் பெட்ரோலை ஊற்றி எரித்துவிட்டு தப்பிசென்றாராம்.
இலத்தூா் போலீஸாா் கடந்த 11ஆம் தேதி கமலியின் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து, ஜான்கில்பா்ட் பிரேம்ராஜ், தங்கதிருப்பதி ஆகியோரை கைது செய்தனா்.
இந்த நிலையில், இலத்தூரில் பெண் சடலமாக மீட்கப்பட்ட பகுதியில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன், காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டாா்.