வேனை ஏற்றி அண்ணனை கொல்ல முயற்சி; தம்பி உள்பட இருவா் கைது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே நடைபாதை பிரச்னையில், அண்ணன் மீது வேனை ஏற்றி கொலை செய்ய முயன்ாக அவரது தம்பி உள்பட 2 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.
செங்கோட்டை அருகேயுள்ள புளியறை தெற்குமேடு பாக்யாநகரை சோ்ந்தவா் சுப்பையா பாண்டியன் (65). காய்கனி வியாபாரி. இவரது சகோதரா் இருளப்பன் (55). இருவரின் வீடும் அருகருகே அமைந்துள்ளனவாம். இதில் நடைபாதை தொடா்பாக இருவருக்குமிடையே பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், காய்கனி வியாபாரத்திற்காக பெரியபிள்ளை வலசை வழியாக சுப்பையா பாண்டியன் பைக்கில் சென்றபோது இருளப்பனின் மகன் வினோத்குமாா்(29) வேனை ஓட்டுவந்து பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டாராம்.
இதுகுறித்து செங்கோட்டை காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப்பதிந்து, அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், விபத்தல்ல; இருளப்பனும், அவரது மகனும் சோ்ந்து திட்டமிட்டு, கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், வேனையும் பறிமுதல் செய்தனா்.