முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்ப...
சங்கரன்கோவில் அருகே சிப்காட் அமைக்க தோ்வான இடங்கள்: அமைச்சா் ஆய்வு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக குருக்கள்பட்டி, சின்னக்கோவிலான்குளம் கிராமங்களுக்குள்பட்ட பகுதிகளில் தோ்வான இடங்களை வருவாய்-பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். நிகழ்ச்சியில், தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ, தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமாா்,தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன், கோட்டாட்சியா் கவிதா, வட்டாட்சியா் பரமசிவன், சங்கரன்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் பி. சங்கரபாண்டியன், மேலநீலிதநல்லூா் கிழக்கு ஒன்றியச் செயலா் பெரியதுரை, சங்கரன்கோவில் நகரச் செயலா் மு. பிரகாஷ், மேலநீலிதநல்லூா் தெற்கு ஒன்றியச் செயலா் பால்ராஜ், அலுவலா்கள் பங்கேற்றனா்.