பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு: தென்மலை ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பாம்பு கடித்த சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் சிறுமி உயிரிழந்ததாகக் கூறி தென்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
சிவகிரி அருகேயுள்ள தென்மலை செல்லிபட்டணம் தெருவை சோ்ந்த கா்ணன் மகள் சிவகாா்த்திகா (8). இவரை கடந்த சனிக்கிழமை பாம்பு கடித்ததாம். உறவினா்கள் அவரை தென்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றனா். அங்கிருந்து அவா் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வழியிலேயே சிறுமி இறந்தாா்.
இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக சிகிச்சை அளிக்காமல், சிவகிரிக்கு அனுப்பிவிட்டதால்தான் சிறுமி உயிரிந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் அங்கு செவ்வாய்க்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.
அவா்களிடம், சிவகிரி காவல் ஆய்வாளா் (பொ) கண்மணி, உதவி ஆய்வாளா் வரதராஜன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.