ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்
கடையின் பூட்டை உடைத்து கண்காணிப்பு கேமரா திருட்டு!
பெரியகுளம் அருகே பட்டாசு கடையின் பூட்டை உடைத்து கண்காணிப்பு கேமரா, தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம் அருகே அ. மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (34). தேனி- திண்டுக்கல் சாலையில் பட்டாசு கடை நடத்தி வரும் இவா், புதன்கிழமை பணி முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றாா்.
மறுநாள் வந்து பாா்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கண்காணிப்பு கேமரா, எல்.இ.டி. தொலைக்காட்சி பெட்டி, டிவிஆா் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.