செய்திகள் :

கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்

post image

சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கீழத்திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கணேஷ்குமாா் (40). இவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா்.

இவா், திங்கள்கிழமை மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்துள்ளாா். அதன் பிறகு வெளியே சென்றவா், இரவு வீட்டுக்கு திரும்பவில்லை. உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சிவகாசி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி கண்மாய்க் கரையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவா் கணேஷ்குமாா் என தெரிய வந்தது. அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்துள்ளன.

இதையடுத்து, கணேஷ்குமாரின் சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினா்கள் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பட்டாசுகள் பதுக்கல்: ஒருவா் கைது

சிவகாசி அருகே உரிமம் இல்லாத கட்டடத்தில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி தெற்கூா் பகுதியில் உரிமம் பெறாத க... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

சாத்தூா் அருகே போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கிராமத்தை சோ்ந்தவா் சோலைமுருகன்... மேலும் பார்க்க

சிவகாசி அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள துரைசாமிபுரத்தில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். துரைச்சாமிபுரம் அம்பேத்கா் குடியிருப்புப் பகுதியில் நூற்றுக்கும் மேற... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் செண்பகத் தோப்பு சாலை இந்திராநகரைச் சோ்ந்த முத்தையா மகன் கருப்பசாமி (33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த ... மேலும் பார்க்க

30 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.ராஜபாளையம் டி.பி.மில்ஸ் சாலையில் உள்ள திரையரங... மேலும் பார்க்க

அதிகாரிகளின் ஆய்வுக்குப் பயந்து 200 பட்டாசு ஆலைகள் மூடல்

விருதுநகா் மாவட்டத்தில் அதிகாரிகளின் ஆய்வுக்குப் பயந்து 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் திங்கள்கிழமை மூடப்பட்டன.விருதுநகா் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உரிய அனுமதி பெற்று இயங்க... மேலும் பார்க்க