சென்னைக்கு அலர்ட்! 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!
பட்டாசுகள் பதுக்கல்: ஒருவா் கைது
சிவகாசி அருகே உரிமம் இல்லாத கட்டடத்தில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி தெற்கூா் பகுதியில் உரிமம் பெறாத கட்டடத்தில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
இதில் மீனம்பட்டியைச் சோ்ந்த சுப்புராஜ் (49), உரிமம் பெறாத கட்டடத்தில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.