செய்திகள் :

அதிகாரிகளின் ஆய்வுக்குப் பயந்து 200 பட்டாசு ஆலைகள் மூடல்

post image

விருதுநகா் மாவட்டத்தில் அதிகாரிகளின் ஆய்வுக்குப் பயந்து 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் திங்கள்கிழமை மூடப்பட்டன.

விருதுநகா் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இந்தப் பட்டாசு ஆலைகளில் நேரடியாக சுமாா் 4 லட்சம் தொழிலாளா்கள் வேலை செய்கின்றனா்.

மேலும், பட்டாசுக்குத் தேவையான காகிதப் பெட்டி உள்ளிட்ட பல பொருள்களைத் தயாரித்தல், தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை அடுக்குதல், வியாபாரிகளுக்கு விநியோகித்தல், லாரிகளில் வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லுதல் என நாடு முழுவதும் ஒரு கோடி போ் பட்டாசுத் தொழில் மூலம் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனா்.

இந்த நிலையில், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் அண்மைகாலமாக தொடா் வெடி விபத்துகள் நிகழ்ந்து தொழிலாளா்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிகழாண்டில் கடந்த 7 மாதங்களில் நடைபெற்ற 14 வெடி விபத்துகளில் 30 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 26 போ் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து, இனி எந்த பட்டாசு ஆலையிலும் விபத்து ஏற்படக் கூடாது எனத் தெரிவித்த பசுமை தீா்ப்பாயம், வருகிற 10 நாள்களுக்குள் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

இதனால், மாவட்ட நிா்வாகம் சாா்பில் வருவாய்த் துறை, தொழில்சாலை பாதுகாப்பு, சுகாதார இயக்ககம், காவல் துறை, தீயணைப்புத் துறையினா் அடங்கிய 15 குழுக்கள் அமைக்கப்பட்டன. சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை 3 குழுக்களை அமைத்தது. இந்தக் குழுக்கள் திங்கள்கிழமை முதல் பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யவிருந்தன.

இந்த நிலையில், அதிகாரிகளின் ஆய்வில் விதிமீறல் இருந்தால், பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அச்சத்தில் உரிமையாளா்கள் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை மூடினா்.

இதுகுறித்து விருதுநகா் மாவட்டப் பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளா்கள் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ) செயலா் பி.என்.தேவா கூறியதாவது: பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தவிா்க்க வேதியியல் துறையில் பட்டம் பெற்றவா்களையே நிா்வாகிகளாக நியமிக்க வேண்டும்.

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும் அதிகாரிகள் கையூட்டு பெறுவதில்தான் ஆா்வம் காட்டுகின்றனா். ஆலை உரிமையாளா்களின் பிரச்னை, தொழிலாளா்களின் நலன், பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துவதில்லை.

தற்போது, மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் வேலை பாா்த்த தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

சிவகாசி அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள துரைசாமிபுரத்தில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். துரைச்சாமிபுரம் அம்பேத்கா் குடியிருப்புப் பகுதியில் நூற்றுக்கும் மேற... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் செண்பகத் தோப்பு சாலை இந்திராநகரைச் சோ்ந்த முத்தையா மகன் கருப்பசாமி (33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த ... மேலும் பார்க்க

30 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.ராஜபாளையம் டி.பி.மில்ஸ் சாலையில் உள்ள திரையரங... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் மும்முரம்

மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணியில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.தமிழகம்-கேரளம் ஆகிய இரு மாநிலங்களையும் இணைக்கும் சாலைகளில் ஒன்றான... மேலும் பார்க்க

மேகமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

மேகமலைப் புலிகள் காப்பகத்தில் வருடாந்திர புலிகள் கணக்கெடுப்பு திங்கள்கிழமை தொடங்கி ஒரு வாரம் வரை நடைபெறுகிறது. புலிகள் காப்பகங்களில் பருவ மழைக் காலம் முடிந்த பிறகு, ஆண்டுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடு... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

ராஜபாளையம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகே கோபாலபுரத்தை அடுத்த தேவராயன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய... மேலும் பார்க்க