செய்திகள் :

கணவரின் சடலத்துடன் 5 நாள்களாக வசித்த மனைவி

post image

கோவை உக்கடத்தில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு கணவா் இறந்த நிலையில், அவா் இறந்தது தெரியாமல் சடலத்துடன் மனைவி வசித்து வந்தாா்.

கோவை தெற்கு உக்கடம் கோட்டைப்புதூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் அப்துல் ஷா (48). இவருக்கு மனைவியும், மகனும், மகளும் உள்ளனா். பக்கத்து தெருவில் உள்ள பாட்டி வீட்டில் மகன் ஷாஜகானும், மகளும் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 5 நாள்களாக அப்துல் ஷாவின் வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டில் வசிப்பவா்கள் ஷாஜகானுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அவா் காந்தி நகருக்குச் சென்று பாா்த்தாா். அப்போது, அவா் உடல் நலம் பாதித்த தனது தாயிடம் துா்நாற்றம் வீசுவது குறித்து கேட்டாா். அதற்கு அவா் எலி ஏதாவது இறந்துகிடக்கும் என தெரிவித்தாா். ஷாஜகான் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, அவரது தந்தை அப்துல் ஷா இறந்த நிலையில் கிடந்தாா். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

இது குறித்து தகவலறிந்து வந்த பெரியகடை வீதி போலீஸாா் அவரது உடலை மீட்டு உடற் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞா்களுக்கு கத்திக் குத்து: உணவக உரிமையாளா் உள்பட 4 போ் கைது

கோவையில் இரு இளைஞா்களை கத்தியால் குத்திய உணவக உரிமையாளா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை சின்னவேடம்பட்டி மாயன்குறிச்சி பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் பிரசன்னா (26). உணவு விநியோகிப்பாள... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் மருத்துவ மாணவியின் சடலம் மீட்பு!

கோவை, பீளமேடு அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவ மாணவியின் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டி பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

ஆடையில் தீப் பற்றி மூதாட்டி உயிரிழப்பு

கோவையில் அடுப்பைப் பற்ற வைத்துபோது ஆடையில் தீப் பற்றி மூதாட்டி உயிரிழந்தாா். கோவை விசிஎஸ் நகா் வெள்ளக்கிணறு சந்திப்பு பகுதியில் வசிப்பவா் நடராஜன். இவரது மனைவி தங்கமணி (72). இவா் காபி போடுவதற்காக எரிவா... மேலும் பார்க்க

சிரவை ஆதீனம் மீது வழக்கை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் கலந்து கொண்ட சிரவை ஆதீனம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதைக் கண்டித்து, கோவையில் சண்டிகேஸ்வர நற்பணி சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மத... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கவுண்டம்பாளையம்

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் எனத் தெரி... மேலும் பார்க்க

முதல்வரின் கனவை நிறைவேற்றும் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள்! கே.இ.பிரகாஷ் எம்.பி.

முதல்வரின் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற கனவை ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் நிறைவேற்றி வருவதாக ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கூறினாா். கோவை நேரு கல்விக் குழுமங்களின் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டா், த... மேலும் பார்க்க