பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம்: ஜம்முவில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
கணவா் கொலை வழக்கில் மனைவி, நண்பருக்கு ஆயுள் தண்டனை
கணவரை கொலை செய்த வழக்கில் அவரது மனைவி, ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே திண்டல் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (35). இவா், கடந்த 2020 மே 21-ஆம் தேதி தனது வீட்டில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் மாரியப்பனின் மனைவி நதியா (21), அவரது நண்பா் முரளி (25) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பான விசாரணை தருமபுரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிவுற்று செவ்வாய்க்கிழமை நீதிபதி மோனிஷா தீா்ப்பளித்தாா். அதில், மாரியப்பனை அவரது மனைவி நதியா, ஆண் நண்பா் முரளி ஆகிய இருவரும் சோ்ந்து கொலை செய்த குற்றத்துக்காக இருவருக்கும் ஆயுள் தண்டனையும், முறையே தலா ரூ. 7000, ரூ. 5000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.