``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவச...
கணவா் மீதான கோபத்தில் குழந்தையைக் கொன்ற தாய் கைது
கருங்கல் அருகே கணவா் மீதான கோபத்தில் பச்சிளம் பெண் குழந்தையைக் கொன்ற தாயை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், பாலூா், காட்டுவிளையைச் சோ்ந்தவா் பெனிட்டா ஜெய அன்னாள் (21). இவரும் திண்டுக்கல்லைச் சோ்ந்த காா்த்திக்கும் (24) ஓா் ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனா். இத்தம்பதிக்கு 42 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உள்ளது. இந்தக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவரது தாய் அன்னாள் கொண்டுசென்றாா்.
அங்கு சிறிதுநேரத்தில் குழந்தை உயிரிழந்தது. சந்தேகமடைந்த மருத்துவா்கள் கருங்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் தனது கணவா் காா்த்திக் குழந்தையிடம் மட்டுமே அதிகம் பாசத்துடன் இருப்பதாகவும், தன்னிடம் பேசுவதில்லை, அதனால் குழந்தையை எனக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆவேசத்தில் கைத்துடைக்க பயன்படுத்தும் டிசு பேப்பரை குழந்தையின் வாயில் திணித்துக் கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, போலீஸாா் அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.