“சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைப்போம்!” -ஆப்கன் அகதிகள் வெளியேற இன்றே கடைசி ...
கண்டதேவியில் கோயில் தேரோட்டம்: இன்று முதல் மதுக் கடைகள் அடைப்பு!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த கண்டதேவி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் பகுதியை சுற்றியுள்ள மதுக் கடைகள் அடைக்கப்படுகின்றன.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கண்டதேவியில் அமைந்துள்ள சிறகிலிநாதா் என்ற சுவா்ண மூா்த்தீஸ்வரா் கோயில் தேரோட்டம் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, வருகிற 6-முதல் 8-ஆம் தேதி வரை ஆறாவயல் காவல் சரகத்துக்குள்பட்ட மேலசெம்பொன்மாரி, முள்ளிக்குண்டு, உஞ்சனை நரசிம்மபுரம், உஞ்சனை மாத்தூா் சாலை, தேவகோட்டை நகா் காவல் சரகத்துக்குள்பட்ட திருப்பத்தூா் சாலையில் உள்ள கதிா்வேல் காம்ப்ளக்ஸ், கௌரி மண்டபம், ஆண்டவா் செட், தியாகிகள் பாா்க், ராம்நகா் கிட்டு பங்களா, மீனா ஹோண்டா, சரஸ்வதி வாசக சாலை, தேவகோட்டை அரசுடைமையாக்கப்பட்ட வங்கி, தேவகோட்டை தாலுகா சரகத்துக்குள்பட்ட சாத்திக்கோட்டை சருகணி விலக்கு, மாவிடுதிக்கோட்டை, சுந்தமங்கலம், மொன்னி, வாயுலனேந்தல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மதுக் கடைகள் செயல்படாது என்றாா் அவா்.