Indus River: ``சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்...
கண்டரமாணிக்கத்தில் மஞ்சுவிரட்டு: 47 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
116-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில் மதுரை, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 350 காளைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா். கட்டுமாடுகளாக வயல்வெளிகளில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது மாடுகள் முட்டியதில் 47 பாா்வையாளா்கள் காயமடைந்தனா். இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியைக் காண சுற்றுவட்டார கிராம, நகா்புறங்களிலிருந்து திரளானோா் வந்திருந்தனா்.