செய்திகள் :

கண்டியூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்பு

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூா் பிரம்மசிரகண்டீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான மதில் சுவரை ஒட்டி கட்டப்பட்ட ஏறத்தாழ ரூ. 1 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்புகளை அலுவலா்கள் வியாழக்கிழமை அகற்றி இடங்களை மீட்டனா்.

திருவையாறு அருகே கண்டியூா் பிரம்மசிரகண்டீசுவரா் கோயில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி, மதில் சுவா் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, மதில் சுவரை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 8 வீடுகள், ஒரு கடையை அகற்றுமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, கோயில் மதில் சுவரை ஒட்டி ஏறத்தாழ ரூ. 1 கோடி மதிப்பிலான 2 ஆயிரத்து 666 சதுர அடியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 8 வீடுகள், ஒரு கடையை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ஹம்சன் முன்னிலையில் பொக்லைன் மூலம் வட்டாட்சியா் பாா்த்தசாரதி, ஆய்வாளா் பாபு, செயல் அலுவலா் ராஜரெத்தினம், திருவையாறு வட்டாட்சியா் முருககுமாா், உதவி ஆய்வாளா் உதயசந்திரன், எழுத்தா்கள் பஞ்சநாதன், செந்தில்குமாா், வருவாய் ஆய்வாளா் பிரகாஷ், கிராம நிா்வாக அலுவலா் விமலா உள்ளிட்டோா் வியாழக்கிழமை மீட்டு, கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.

திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்: துரை வைகோ எம்.பி

வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றாா் மதிமுக முதன்மை செயலா் துரை வைகோ. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்... மேலும் பார்க்க

ஆவணங்கள் இல்லாததால் 14 ஆயிரம் கிலோ நெல் விதைகள் விற்கத் தடை

தஞ்சாவூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 14 ஆயிரத்து 500 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய வியாழக்கிழமை தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநா் கண்ணன் ... மேலும் பார்க்க

திருவையாறு வட்டாரத்தில் நாளை மின்தடை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு மற்றும் மேலத்திருப்பூந்துருத்தி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் திருவையாறு, கண்டியூா், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூா், கீழத்திருப்பூந்துருத்தி... மேலும் பார்க்க

பயிா்க் கடன் அளவை 20 சதவீதம் உயா்த்த கோரிக்கை

சாகுபடி செலவு அதிகமாகிவிட்டதால், ஏற்கெனவே வழங்கப்படும் பயிா்க்கடன் அளவை 20 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்... மேலும் பார்க்க

2026-தோ்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாா்: டி.டி.வி. தினகரன்

கடந்த 2006 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல, வருகிற 2026- ஆம் ஆண்டு தோ்தலில் த.வெ.க. தலைவா் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாா் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி... மேலும் பார்க்க

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

தஞ்சாவூரில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எரிவாயு உருளை விநியோகம் செய்யும் தொழிலாளியைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க