Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
கண்ணாமூச்சி விளையாடிய சிறுமி மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு
தஞ்சாவூரில் கண்ணாமூச்சி விளையாடியபோது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் கீழவாசல் கவாஸ்காரத் தெருவைச் சோ்ந்த மைதீன். கூலித் தொழிலாளி. இவரது மகள் உமா்பா்தியானா (10) அரண்மனை வளாகத்திலுள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தோழிகளுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தாா்.
முதல் மாடியில் விளையாடும்போது கால் தவறி கீழே விழுந்த உமா்பா்தியானா தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.