கண்ணுக்கு கண் என்பது மொத்த உலகத்தையும் குருடாக்கும்: அம்பத்தி ராயுடு
இந்தியா, பாகிஸ்தான் போர் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு கூறியதை கவனம் ஈர்த்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலையடுத்து இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
நேற்றிரவு தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர்.
கிரிக்கெட் வீரர்கள், தொழில்நுட்ப குழிவினர்கள் பாதுகாப்பாக விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் தில்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியதாவது:
கண்ணுக்கு கண் என்பது மொத்த உலகத்தையும் குருடாக்கிவிடும். இது கோழைத்தனம் என்பதல்ல, ஞானம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
நீதி நிலைநாட்டப்படும், ஆனால் மனிதாபிமானத்தை இழந்துவிடக்கூடாது. கருணையை நமது இதயத்தில் வைத்தும் நமது நாட்டை தீவிரமாக நேசிக்கலாம்.
நாட்டுப் பற்றும் அமைதியும் கைகள் பிடித்து நடக்கலாம் எனக் கூறினார்.
“An eye for an eye makes the whole world blind.”
— ATR (@RayuduAmbati) May 8, 2025
Let’s remember — this isn’t a call for weakness, but a reminder of wisdom.
Justice must stand firm, but never lose sight of humanity.
We can love our nation fiercely and still hold compassion in our hearts.
Patriotism and peace can…
ஆதரவும் எதிர்ப்பும் வந்தபிறகு மற்றொரு பதிவினை அம்பத்தி ராயுடு பதிவிட்டார். அதில் அவர் கூறியதாவது:
இந்தமாதிரி நேரத்தில் நாம் ஒற்றுமையாக பயமில்லாமல் உறுதியாக இருக்க வேண்டும். இந்திய ராணுவத்துக்கு மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒப்பிடமுடியாத தைரியம், சுயநலமில்லாமல் நாட்டிற்க்காக தியாகம் செய்யும் ராணுவத்தினரின் செயல்கள் கவனம்பெறாமல் செல்லாது. உங்களது தைரியம்தான் நமது மூவண்ண கொடியை உயர பறக்கவும் எல்லையைப் பாதுகாக்கவும் உதவுகிறது. நாளை அமைதி நிலவ உங்களது சேவை தொடரட்டும். ஜெய்ஹிந்த் எனக் கூறியுள்ளார்.
இந்தப் பதிவுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
In moments like these, we stand united not in fear, but in resolve. I feel immense gratitude to our Indian Army who are the real heroes who carry the weight of a nation with unmatched courage, discipline, and selflessness
— ATR (@RayuduAmbati) May 8, 2025
Your sacrifices don't go unnoticed. Your bravery is what…