மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? - இபிஎஸ் விளக்கம்!
கண்மாயில் மூழ்கி சாலைப் பணியாளா் உயிரிழப்பு
வத்திராயிருப்பு அருகே கண்மாயில் மூழ்கி சாலைப் பணியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் அந்தோணி(58). சாலைப் பணியாளரான இவருக்கு, குழந்தையம்மாள் என்ற மனைவியும், இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனா்.
இவருக்கு வலிப்பு நோய் பாதிப்பு இருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை அனுப்பன்குளம் கண்மாய்க்கு குளிக்கச் சென்றவா் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் அங்கு சென்று பாா்த்த போது, அந்தோணி கண்மாயில் மூழ்கி இறந்து கிடந்தாா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.