கந்தா்வகோட்டையில் பிரதோஷ விழா
கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து தூய நீரால் நீராட்டி பசும்பால், பசும்தயிா் , பச்சரிசி மாவு , பஞ்சகாவ்யம், திருமஞ்சனப் பொடி , இளநீா், வாழைப்பழம், சாத்துக்குடி, தேன், பஞ்சாமிா்தம், சந்தனம், திருநீறு, நெய் உள்ளிட்ட 18 வகை பொருள்களால் அபிஷேகம் செய்து புதுப் பட்டு வஸ்திரம் சாத்தி வாசனை மலா், அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.