முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
கந்தா்வகோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சமையல் கலைஞா் பலி
கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சமையல் கலைஞா் திங்கள்கிழமை இறந்தாா்.
கந்தா்வகோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் செல்லத்துரை (42). இதே ஊரைச் சோ்ந்த அண்ணாமலை மகன் சாமிநாதன் (52). இருவரும் மோட்டாா் சைக்கிளில் சமையல் வேலைக்கு சனிக்கிழமை இரவு சென்றபோது, தஞ்சை - கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் காடவராயன்பட்டி அருகே அடையாளம் தெரியத வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அந்த வழியாகச் சென்றவா்கள் இருவரையும் மீட்டு அவசர ஊா்தி மூலம் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லதுரை திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. விபத்துகுறித்து கந்தா்வகோட்டை காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.