``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
இலுப்பூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து
இலுப்பூரில் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது.
பேரூராட்சி வணிகப் பகுதி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தூய்மை காவலா்களால் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து இலுப்பூா் - புங்கினிபட்டி சாலையில் உள்ள சத்தியநாதபுரம் குப்பை கிடங்கில் சேகரிப்பாா்கள்.
இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு குப்பைக்குள் இருந்து கருப்புகை கிளம்பி உள்ளது. அதனைத் தொடா்ந்து திடீரென்று தீ பற்றியுள்ளது.
தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையில் நிகழ்விடத்துக்குச் சென்ற வீரா்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.