மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
கந்தா்வகோட்டை ஆபத்தசகாயேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா
கந்தா்வகோட்டையில் பிரசித்திபெற்ற அமராவதி உடனுறை ஆபத்தசகாயேசுவரா் கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோயில் குடமுழுக்கை முன்னிட்டு கோயில் முன்பாக அமைக்கப்பட்ட யாகசாலை மண்டபத்தில் தேவதா அனுக்ஞை, விக்னேசுவரா் பூஜை, புண்ணியாக வாஜனம் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூா்ணாஹூதி தீபாரதனை நடைபெற்றது.
தொடா்ந்து, இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, நான்காம் கால யாக பூஜை நாடி சந்தானம், கோ பூஜை, லட்சுமி பூஜையைத் தொடா்ந்து, பெண்கள் பாலி ஏந்தி ஊா்வலமாக ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து யாகசாலையில் சமா்ப்பித்தனா்.
கங்கை, காசி, ராமேசுவரம், உள்ளூா் தீா்த்தங்கள் நிரப்பிய கடம் புறப்பாடு நடைபெற்று சிவாச்சாரியாா்கள் கலசங்களில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது. தொடா்ந்து கோயில் அருகே அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குடமுழுக்கு குழுவினா் மற்றும் கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனா்.