கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் சனி மகா பிரதோஷ அபிஷேக ஆராதனை விழா
கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் சனி மகா பிரதோஷ அபிஷேக ஆராதனை விழா நடைபெற்றது.
கந்தா்வகோட்டையில் அமைந்து உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு சனி மாக பிரதோஷ தினத்தை முன்னிட்டு நந்தி ஈஸ்வரருக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து ஆலய வாளகாத்தில் உள்ள தூய நீரால் நீராட்டி தண்ணீா் அபிஷேகமும், பசும் பால் அபிஷேகமும், பசும்தயிா், பச்சரிசி மாவு, பஞ்சகாவ்யம், திருமஞ்சன பொடி , இளநீா்,வாழைப்பழம், சாத்து குடி அபிஷேகமும், தேன், பஞ்சாமிா்தம், சந்தனம், திருநீறு , நெய் போன்ற 18 வகை அபிஷேகம் செய்து புதுபட்டு வஸ்திரம் நந்தி ஈஸ்வரருக்கு சாத்தி வண்ணமிகு வாசனை மலரும், அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனா்.
மேலும் கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.