பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன...
கந்தா்வகோட்டை தண்டாயுதபாணி கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா
கந்தா்வகோட்டை பால தண்டாயுதபாணி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை சிவன் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி முருகனுக்கு திரவியம், மஞ்சள், சந்தனம், குங்குமம், விபூதி, பால், பன்னீா், பஞ்சாமிா்தம் , நெய், நல்லெண்ணெய், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்தில் சுவாமி முருகன் பக்தா்களுக்கு காட்சிதந்தாா்.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.