துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!
கந்தா்வகோட்டை நகைக் கடையில் மோசடி முயற்சி
கந்தா்வகோட்டையில் மோசடி செய்ய முயன்ற மா்ம நபா் வியாழக்கிழமை பிடிபட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வியாழக்கிழமை இரவு வந்த சுமாா் 45 வயதுள்ள ஆண், பெண் ஐந்து பவுன் மதிப்புள்ள தங்க சங்கிலியைக் கொடுத்து அதற்கு பதிலாக இரு தங்கச் சங்கிலி வேண்டும் எனக் கேட்டுள்ளனா்.
இதையடுத்து நகைக்கடைக்காரா் அந்தச் சங்கிலியை பரிசோதித்தபோது அது போலி எனத் தெரியவந்தது. தகவலறிந்து வந்த நகைக்கடை சங்க வியாபாரிகள் பிடிபட்ட ஆணிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது அவரோடு வந்த பெண் நழுவி தப்பிவிட்டாா்.
இதையடுத்து அந்த மா்ம நபரை கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.