செய்திகள் :

கனடாவில் சிறிய விமானம் விபத்து: இந்திய இளைஞர் பலியானது உறுதி!

post image

கனடா நாட்டில் சிறிய ரக விமான விபத்தில், இந்திய இளைஞர் ஒருவர் பலியானது உறுதியாகியுள்ளதாக, அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

நியூ ஃபவுண்ட் லேண்ட் மாகாணத்தின், டீர் லேக் பகுதியில் கடந்த ஜூலை 26 ஆம் தேதியன்று, பிரிட்டனைச் சேர்ந்த கிஸிக் ஏரியல் சர்வே நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 2 பேரும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த விபத்தில் பலியானவர்களின் பெயரை வெளியிட அந்நிறுவனம் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டு, அரசு அதிகாரிகளின் விசாரணைக்குப் பின் பலியானவர்களின் விவரங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்தில் பலியான 2 பேரில் ஒருவர், கௌதம் சந்தோஷ் எனும் இந்தியர் என்பது உறுதியாகியுள்ளதாக, டோரண்டோவிலுள்ள இந்தியத் தூதரகம் இன்று (ஜூலை 29) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில், பலியான 27 வயதான கௌதம் சந்தோஷ், கேரளத்தைச் சேர்ந்தவர் என்றும், கிஸிக் ஏரியல் சர்வேவின் டெல்டா நிறுவனத்தில் அவர் டெக்னிகல் எக்ஸ்பெர்டாக, பணியாற்றி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த, ஜூலை 8 ஆம் தேதியன்று, கனடாவின் மனிடோபா மாகாணத்தில் ஏற்பட்ட சிறிய ரக விபத்தில், ஸ்ரீஹரி சுகேஷ் எனும் இந்தியர் உள்பட 2 மாணவ விமானிகள் பலியாகினர். இதில், பலியான ஸ்ரீஹரி சுகேஷும் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நைஜீரியா: பணம் கொடுத்தும் 35 பிணைக் கைதிகள் கொலை! கடத்தல் கும்பல் வெறிச் செயல்!

The Indian Embassy in Canada has confirmed the death of an Indian youth in a small plane crash.

போரை நிறுத்தியதாக மீண்டும் பேச்சு! எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறாரா டிரம்ப்.?!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவிச் சுற்றுலாப் பயணிகள் மீ... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவால் காத்திருக்கும் பயங்கர ஆபத்து: ஜெஃப்ரி ஹிண்டன்

செயற்கை நுண்ணறிவின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியினால் ஏற்படவிருக்கம் மிக பயங்கர ஆபத்துகளை மென்பொருள் நிறுவனங்கள் மறைப்பதாக செயற்கை நுண்ணறிவின் தந்தை (காட்ஃபாதர் ஆஃப் ஏஐ) என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஷிண்டன்... மேலும் பார்க்க

ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை: 9 லட்சம் பேர் வெளியேற்றம்!

ரஷியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், சுனாமி பாதிக்கும் என கணிக்கப்படும் பகுதிகளில் இருந்து 9 லட்சம் பேரை வெளியேற்றும் பணி தீவிர... மேலும் பார்க்க

வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 - 25% வரி! - இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இந்தியாவுக்கு 20 முதல் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். Trump says US-India... மேலும் பார்க்க

நியூயாா்க்கில் சரமாரி துப்பாக்கிச்சூடு: காவலா் உள்பட 4 போ் உயிரிழப்பு

நியூயாா்க் நகரில் நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் காவலா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்தியவா் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.இது குறித்து போலீஸாா் கூறியதாவது:நியூயாா்க்க... மேலும் பார்க்க

நெதா்லாந்து: இஸ்ரேல் அமைச்சா்களுக்குத் தடை

பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றம், காஸா போரை ஊக்குவித்துவரும் தீவிர வலதுசாரிகளான இஸ்ரேல் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் இதமாா் பென்-கிவிா், நிதியமைச்சா் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோா் நெதா்லாந்து வருவதற்... மேலும் பார்க்க