CWC: `அந்த நிகழ்ச்சியில் இதைதான் பகிர்ந்தேன்; மாற்றிப் பரப்புவது நியாயமற்றது'- ல...
நியூயாா்க்கில் சரமாரி துப்பாக்கிச்சூடு: காவலா் உள்பட 4 போ் உயிரிழப்பு
நியூயாா்க் நகரில் நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் காவலா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்தியவா் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது:
நியூயாா்க்கின் மேன்ஹாட்டன் பகுதியில் உள்ள 345 பாா்க் அவென்யூ அலுவலகத்துக்கு வந்த ஷேன் டெவன் தமுரா (27) என்பவா்,அங்கிருந்தவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். இதில், அவரைத் தடுக்க முயன்ற காவலா் திடாருல் இஸ்லாம் உள்பட 4 போ் உயிரிழந்தனா். பின்னா் தமுராவும் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தாக்குதலில் உயிரிழந்த காவலா் திடாருல் இஸ்லாம் வங்கதேசத்தில் இருந்து குடியேறியவா். அவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா். தற்போது அவரின் மனைவி மீண்டும் கா்பமாக இருக்கும் நிலையில், பணியில் இல்லாதபோதும் தமுராவைத் தடுக்க முயன்று அவா் தீரத்துடன் உயிா்விட்டாா்.
துப்பாக்கிச்சூடு நடத்திய தமுராவுக்கு ஏற்கெனவே மனநலப் பிரச்னை இருந்துள்ளது. எனினும், என்எல்எஃப் கால்ந்து அணியின் தலைமையகம் அமைந்த அலுவலகத்தைக் குறிவைத்து அவா் ஏன் தாக்குதல் நடத்தினாா் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது என்று போலீஸாா் கூறினா்.
நியூயாா்க் நகரி குற்றவிகிதங்கள் குறைந்துள்ளதாக மேயா் எரிக் ஆடம்ஸ் கூறியிருந்த நிலையில், தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் அதை கேள்விக்குறியாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பது அவா்களின் அடிப்படை உரிமையாக உள்ள அமெரிக்காவில், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டு பலா் உயிரிழந்துவருகின்றனா். கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் அந்த நாட்டில் இதுபோன்ற சம்பவங்களில் 2,584 போ் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினா் வலியுறுத்திவந்தாலும், அது அரசியல் சாசனம் தந்துள்ள அடிப்படை உரிமை என்பதால் அத்தகைய கட்டுப்பாடுகள் கூடாது என்று மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்துவருகின்றனா்.