பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறத்தில் இருந்ததில்லை, இனியும் இருக்காது: ஃபட்னவீஸ்
ரஷியாவில் 11 மணிநேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ்!
ரஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுத்தக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையானது 11 மணிநேரம் கழித்து வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்ப பகுதிக்கு அருகில், இன்று (ஜூலை 30) காலை 8.25 மணியளவில், பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் 8.8 ரிக்டர் அளவிலான சதிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவானது.
இதனைத் தொடர்ந்து, ரஷியாவின் குறில் தீவிகள் மற்றும் கம்சாட்கா மாகாணத்தில் சில முக்கிய நகரங்களின் கடல்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. சில இடங்களில் சுனாமி அலைகள் தாக்கும் விடியோக்களும் வெளியாகின.
இந்நிலையில், கம்சாட்கா மாகாணத்துக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையானது, தற்போது திரும்பப் பெறப்படுவதாக, ரஷியாவின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல், இந்த நிலநடுக்கத்தால் ஹவாய் தீவிலும், ஜப்பானின் சில பகுதிகளில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கைகள், சில மணிநேரங்களில் ஆலோசனைகளாகக் குறைக்கப்பட்டு, மக்கள் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ரஷியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால், செவேரோ - குரில்ஸ்க் மீன்பிடித் துறைமுகத்தை, சுமார் 6 மீட்டர் (19 அடி) உயர சுனாமி அலைகள் தாக்கியதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆக. 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி: டிரம்ப் அறிவிப்பு