செய்திகள் :

கனமழை ஆய்வு: ``முடியாவிட்டால், ராஜினாமா செய்யுங்கள்!" -ஆவேசமான மக்கள்; பாதியில் கிளம்பிய அமைச்சர்!

post image

கடந்த இரண்டு நாள்களாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்ததில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாய் மாறியிருக்கின்றன. இதைத்தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக பேரிடர் மீட்பு படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் துரித கதியில் செயல்பட்டு மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். மேலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படைத்தேவைகளான உணவு, உடை உள்ளிட்டவைகளை தருவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

ஆய்வு

இந்தநிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வந்தார். அவர், ஆலங்குளம் பழைய காவல் நிலையம் முன்பு வந்திறங்கியபோது, அங்கு கூடியிருந்த இளைஞர்கள் சிலர், அமைச்சரை வழிமறித்து தங்கள்‌பகுதியில் மழைவெள்ளம் சூழ்ந்திருப்பது தொடர்பாக பேசினர்.

அப்போது "நெல்லை - தென்காசி இடையே நான்குவழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் ஒருபகுதியாக ஆலங்குளம் காவல் நிலையம் அருகே பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகிறனர். இந்த பால வேலையால்தான் தென்பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால், மருத்துவமனை, அரசுப் பள்ளி செல்லும் மாணவர்கள், சுடுகாட்டிற்கு செல்வோர்கள் என பொதுமக்கள் அனைவருமே 2 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு ஏற்படுத்தி தரவும் பால பணிகள் முடிவுறும்வரை பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் சாலையை கடக்க வசதியாக அப்பகுதியில் மாற்றுப் பாதை ஏற்படுத்தித் தரவேண்டும்" என கோரிக்கை வைத்தனர்.

ஆவேசம்

அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திடீரென குறுக்கிட்டு பேசினர். இதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள், "சாலை பணியை முடிக்க முடியாவிட்டால் பணியை ராஜினாமா செய்துவிட்டு போங்கள்" என ஆவேசமாக கூறினர்.

வாக்குவாதம்

தொடர்ந்து, 'சரியான பாதை ஏற்படுத்தாமல் பாலம் பணி மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒழிக!', என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆகியோர் முன்பு கோஷம் எழுப்பினர். இதனால் அந்த இடம் பரபரப்பானது. இதனையடுத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அங்கிருந்து பாதியில் கிளம்பிச் சென்றார்.

Doctor Vikatan: ஒரு மாதத்தில் எத்தனை கிலோ எடை குறையலாம், தினமும் எடையை செக் பண்ணலாமா?

Doctor Vikatan: ஒரு மாதத்தில் இத்தனைகிலோதான் எடை குறைய வேண்டும் என ஏதேனும் கணக்கு இருக்கிறதா... சிலர் ஒரே மாதத்தில் 10- 12 கிலோவெல்லாம்குறைத்ததாகச்சொல்கிறார்களே... அது சரியானதா... தினமும் உடல் எடையை ச... மேலும் பார்க்க

Beetroot: பீட்ரூட் சமைக்காமல் சாப்பிட்டால் அதிக சத்துகள் கிடைக்குமா? ABC ஜூஸ் தினமும் அருந்தலாமா?

சிவப்பு நிறமும் சிறிது இனிப்பு சுவையும் கொண்ட பீட்ரூட், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான காய். இதன் ஜூஸில் நிறைய ஆரோக்கியப்பலன்கள் இருப்பதால் பெரியவர்களுக்கும் பீட்ரூட் பிடிக்கிறது. பீட்ரூட் சாப்பிடு... மேலும் பார்க்க

Smoking: ஒரு சிகரெட் உங்கள் வாழ்நாளில் 20 நிமிடங்களை குறைக்கிறது - புதிய ஆய்வில் பகீர் தகவல்!

புகைப்பிடிப்பது உலகம் முழுவதும் பரவி காணப்படும் தீய பழக்கமாகும். லண்டன் பல்கலைக்கழக கல்லூரி நடத்திய ஆய்வொன்றில் 20 சிகரெட்டுகள் ஒரு நபரின் வாழ்நாளில் 7 மணிநேரத்தைக் குறைத்துவிடும் எனக் கண்டறியப்பட்டுள... மேலும் பார்க்க

ED: ``தமிழ்நாட்டில் Tent போட்டு தங்கிடுறாங்க'' -அமலாக்கத்துறை சோதனை குறித்து ஜோதிமணி சொல்வதென்ன?

அமலாக்கத்துறை சோதனை குறித்து ஜோதிமணி பேசியிருக்கிறார்.நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கரூர் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஜோதிமணி தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதி... மேலும் பார்க்க

``மேலிட சார் உத்தரவால், எங்களை கைது செய்து ஆட்டு மந்தையில் அடைத்துள்ளனர்..'' - குஷ்பு டென்ஷன்!

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு பேரணி தொடங்கிய நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.மண்டபத்துக்குள... மேலும் பார்க்க