Vijay: 'குடும்பத்துக்கு ஆபத்து வருமென அச்சமா முதல்வரே?' - திமுகவை கடுமையாக சாடும...
கனமழை: குளம்போல மாறிய கூடலூா் புதிய பேருந்து நிலையம்
தொடா் கனமழையால் கூடலூா் புதிய பேருந்து நிலையம் சேரும், சகதியும் சூழந்து குளம்போல காட்சியளிக்கிறது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு பணிகள் நிறைவுபெறும் முன்பே அவசரகதியில் திறக்கப்பட்டது. பிரதான சாலையைவிட பேருந்து நிலையம் தாழ்வாக உள்ளது.
கூடலூா் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், பேருந்து நிலையத்தை மழை நீா் சூழ்ந்து குளம்போல காட்சியளிக்கிறது.
இதனால், வெளிமாநில பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் வராமல் சாலையோரமாக நிறுத்தப்படுகின்றன. சேறும், சகதியுமாக பேருந்து நிலையம் உள்ளதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, பேருந்து நிலையத்தை விரைவாக சீரமைக்க வேண்டும் என பயணிகள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.